இந்த நொடி போதும் அடி
அடியே உந்தன் மடி போதும் அடி
இந்த நொடி
வானவில் எந்தன் கையில் அடி
இரு விழி பார்வை ஒரு வழி ஆனதே
தனி வழி பாதை சொர்க்கம் தான் அதே
நெஞ்சமே நெஞ்சமே கண் கட்டுதடி
கண்ணமே கண்ணமே உன் வெட்கம் அடி
தங்கமே தங்கமே என் உயிர் நாடி
அடியே உந்தன் மடி போதும் அடி
இந்த நொடி
வானவில் எந்தன் கையில் அடி
முத்தம் ஒன்று போட்டால்
முந்தானை வசம் கொண்டால்
கண்ணில் கலவரம் காதல் சுயம்வரம்
என்னுள் எங்கெங்கும் தீ பந்தம்
பருவம் இல்லா பனி மழையாய்
வெள்ளி முளைக்கா வெண் திரையாய்
மாறி மாறி என் காட்டில் மாரியாய்
மல்லிகை வாசக்காரி மண்டி இட்டால்
அடியே உந்தன் மடி போதும் அடி
இந்த நொடி
வானவில் எந்தன் கையில் அடி
இதயம் இரண்டில் பூக்கும் மலராய்
முத்தம் தீண்டும் புள்ளி மான் னாய்
காதலில் காமம் காட்டு தேன் னாய்
சுவாசம் நான்கும் இரண்டாயினா
பேசும் இரண்டும் ஒன்றாயினா
முத்தம் என்றாயினா
சத்தம் இன்றி யுத்தம் நன்றாயினா
இந்த நொடி போதும் அடி
வானவில் எந்தன் கையில் அடி
உன்னில் ஏழு வண்ணம்
கண்ணம் அது சிவப்பு
எனக்கு வேணும் அரஞ்சு
எலுமிச்சை கலர் காரி
கருநீல கண் வாடி
பச்சை பாவாடையில்
ஊதா ரிப்பன் கட்டி
இந்த நொடி போதும் அடி
வானவில் எந்தன் கையில் அடி
இப்பவே இப்பவே கண் கட்டுதடி
இப்பவே இப்பவே கண் கட்டுதடி
உன்னில் ஏழு வண்ணம்
கண்ணில் காதல் வண்ணம்
அடியே உந்தன் மடி போதும் அடி
இந்த நொடி
வானவில் எந்தன் கையில் அடி