பாராமுகம்

என்னவளே,
சற்று நில்.
ஏன்,
பார்த்தும் பாராமல்
போகிறாய்.
உன்
விழி வலையில்
விழுந்த
நான்
மன அலையில்
தவிக்கிறேன்.
விடை தெரியாத
உன் மௌன புன்னகையில்,
மொழி மறந்திருக்கிறேன்.
உன்
தடம் வந்து
தவம் கிடக்கிறேன்.
சந்திப்பாயா?