எனக்கு பிடித்தது போல்

எதுவும் எனக்கு பிடிக்கவில்லை
எந்த இடமும்
என்னையும் என் மனதையும்
பிடித்து வைக்கவும் இல்லை...

அதனால் மாற்ற போகிறேன்
அனைத்தையும் எனக்கு பிடித்ததை போல்...
சில நேரங்களில் நான்
மாற போகிறேன்
இயற்கைக்கு பிடித்ததுபோல்...
இனி என் வாழ்வு வாசம்
வீச போகிறது இயற்கையோடு..

அதற்காய் நான் காட்டிற்கு
ஓட போவது இல்லை...
தனிதீவாய் இருந்த என்
வீட்டை அழகான கூடாய்
மாற்ற போகிறேன்...
சிறகு விரித்து
என் அடையாளத்தோடு
பறக்க போகிறேன்...

பக்கத்து வீட்டு அக்கா
இரைச்சல் வருகிறது
என்று கொபித்துகொண்டால் என்ன
நான் எனக்காக
ஒரு செல்ல பிராணியை
வளர்க்க போகிறேன்...

என் தோழி இது
என்ன பைத்தியகாரத்தனம்
என்று கேலி செய்தால் என்ன
நான் எனக்காகவும்
என் அமைதிக்காகவும்
இனி முகநூலில் முழிக்க
மாட்டேன் என்று சத்தியம்
செய்ய போகிறேன்...

என் அம்மா என்ன
காட்டுகத்தலாய் கத்தினாலும் கூட
தெரு பிள்ளைகளை
ஓன்று சேர்த்தி ஒரு
ஆடல் பாடல் அரங்கேற்றத்தை
செய்து பார்க்க போகிறேன்...

என் அப்பா அவர் அப்பப்பாவை
துணைக்கு கூட்டி வந்தாலும்கூட
எனக்கு பிடிக்காத
அவர் நண்பர் வீட்டிற்கு
விருந்தாளியாய் சென்று
தலைகவிழ்ந்து என்னையும்
என் திறமைகளையும் அவர்
நண்பரின் மகன் ஐ டி படிப்புக்கு
சிரம் தாழ்த்த மாட்டேன்...

நினைக்கும்போதே இனிக்கிறது...
நான் மாற்ற போவது
இந்த ஊரை அல்ல
எனக்காக என் சின்னஞ்சிறு வீட்டையே...

ஆனால் என் விழிகளுக்கு
இனி அழகாய் தெரிய போகிறது
பறந்து விரிந்த இந்த உலகமே...

எழுதியவர் : இந்திராணி (23-Mar-15, 3:46 pm)
பார்வை : 96

மேலே