மனதில் தோன்றிய கவிதை
உன்
கண்களை கண்டதும்
கண்ணாடி போல நொறுங்கினேன்...
உன்
கன்னத்தை பார்த்ததும்
கவிதை எழுதும்
கண்ணதாசனானேன் !
உன் இமை வாளால்
என்னிடம்
கத்திச் சண்டை போடாதே!
உன் வில்லுதட்டிற்கு
அம்பாக மாட்டேனா என்று ஏங்கினேன்..!
உன் முகப்பிரகாசத்தினால்
பகல் நிலவைக் கண்டேன்...
உன்
மெல்லிய உடலைக் கண்டதும் மெய்மறந்து நின்றேன்...
மொத்ததில்
உன் விழிக்கூண்டில்
என்னைக் கைதியாக்கினாய் ...
எப்பொழுது
உன் காதலெனும்
சாவிகொண்டு
மனக்கதவைத் திறக்கப்போகிறாய் ?
என்னில்
பல மாற்றத்தைத் தந்தவளே!
கடைசியில்
ஏமாற்றத்தையும் தந்துவிடாதே..!

