சொல்லும் சேதி என்ன
இட்ட இடத்தில் இருந்து
இளைப்பாற நிழல் தந்து
பசியாற கனி தந்து
பறவைக்கு இல் தந்து
உச்சி வெயிலில் பச்சையை
உணவாக்கி நச்சு கரியமிலமும்
நல்லுயிர்க்கு மூச்சுக் காற்றாக்கி
வெட்டு வோற்கும் விறகாய்
எதிர்ப் பேதும் கூறாது
அசையாது ஆடாது காற்றின்றி 
மௌனத் தவமிருக்கும் மாமரமே
இங்கு  நகரும் ஆற்றலால்
அலப்பறையும் மானுடர்க்கு
சொல்லும் சேதிதான் என்ன?
 
                    

 
                             
                            