புனிதமானது

"புனிதமானது "

பசும்புல்லுக்கு சல்லிவேர் புனிதமானது
நெடுமரத்துக்கு ஆணிவேர் புனிதமானது
இளம்பூவுக்கு ஒரு நாள் புனிதமானது
இன்சொல்லுக்கு வன்கேள்வி புனிதமானது

எந்த மனிதனுக்கு எந்த இடம் புனிதமானது
எந்த மனிதனுக்கு எந்த மதம் புனிதமானது
எந்த மனிதனுக்கு எந்த மொழி புனிதமானது
எந்த மனிதனுக்கு எத்தனைநாள் புனிதமானது

எந்த ஆணுக்கும் பெண் அதிசயம் புனிதமானது
எந்த பெண்ணுக்கும் ஆண் அழகு புனிதமானது
எந்த உயிருக்கும் உணவளித்தல் புனிதமானது
தந்த வாழ்வுக்கு உணர்வு ஒன்றே புனிதமானது

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (27-Mar-15, 4:22 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
Tanglish : kavithai
பார்வை : 58

மேலே