தூவானம் – கே-எஸ்-கலை
மலையுச்சியில் நின்றும்
மார்தட்டிக் கொள்வதில்லை
எறும்புகள் !
==
வழியோரக் குழிகளில்
வழுக்கி விழுவதில்லை
நத்தைகள் !
==
எந்த மூங்கிலிலும்
இசையை ரசிப்பதில்லை
வண்டுகள் !
==
மீன்கொத்திகளின்
பசிக்கு பலியாவதில்லை
திமிங்கிலங்கள் !
==
வலையில் ஒரு மீன்
கவலையில் வீசியவன்
தூண்டில்காரன் அப்படியில்லை !