ஒதுக்கபட்டவனுக்கு ஒய்யார வரவேற்பு

கோவிலுனுள் நுழையும்போது,
ஒதுக்கபட்டவனென்று ஒதுக்கி வைத்தார்கள்;

தாகத்திற்காக தவித்தபோது,
தாழ்த்தபட்டவனென்று தடுத்து நிறுத்தினார்கள்;

துன்பத்தில் துயரபடும்போது,
என்னை தேற்றுவதற்கோ எவருமில்லை;

பாடத்தில் பதக்கம்பெரும்போதோ,
என்னை பாராட்டுவதற்கும் ஒருவருமில்லை;

இப்போதோ என்னைசுற்றி ஒரே கூட்டம்;
என் வீட்டின் முன்னோ ஆட்டம் பாட்டம்;

ஆராய்ந்த போது தான் தெரிகிறது;
என் கையிலோ பணம் புழங்குகிறது!!!

எழுதியவர் : செந்தில் லோகு (28-Mar-15, 8:19 am)
பார்வை : 133

மேலே