வேற்றுமையில் ஒற்றுமை

வேற்றுமையில் ஒற்றுமை

சென்னையில் நான்

கம்பனி கு போவதற்காக பேருந்து நிறுத்தத்தில் நிற்கிறேன். பேருந்தில் ஏறிவிட்டேன். டிக்கெட் வாங்கும் போது.. எனக்குள் சலிப்பு.. ஐயோ.. சில்லறை இல்லை யென நீட்டினேன் இருபது ரூபாயை.. 16 ரூபாய்க்கு டிக்கெட் கிடைத்தது. நடத்துனர் வேறு எதுவும் தெரிவிக்கவில்லை.. எனக்குள் தயக்கம் சில்லறை கேட்பதா.. வேண்டாம் விட்டு விடுவோம். இப்போ என்ன ஆகிவிட போகிறது. இதற்கு முன் நடத்துனரிடம் விட்ட காசுகளையெல்லாம் மூளை ஞாபகப்படுத்தியது.
யோசனையில் இருந்து வெளிவருவதற்குள் இறங்கும் இடம் வந்தது பன்னாட்டு நிறுவனம் என்பதால் அனைத்து தரப்பினரும் வேலை பார்ப்பார்கள்.. நடத்துனர் அருகே ஒரு வட இந்தியர் நிற்கிறார். நான் சில்லறைக்காக தயங்கிக்கொண்டிருந்த போது அவர்..

" அண்ணா... 4 ருபீஸ் சேஞ்ச்.."

நடத்துனரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. நான் இறங்க முற்படும் போது கேட்டு விடலாமா என யோசித்துக்கொண்டே சரி விடு என கேட்டுவிட்டேன்.

" அண்ணா.. நாலு ரூபாய்..."

அவர் எனக்கு குடுத்து விட்டார். அதுவும் சற்றும் யோசிக்காமல் ஆனால் அந்த வட இந்தியருக்கு எப்பதிலும் இல்லை.

நான் இறங்கி விட்டேன் (சுயநலம்). ஆனால் அவரோ இறங்கவில்லை.

" அண்ணா... 4 ருபீஸ் சேஞ்ச்."
" அண்ணா... 4 ருபீஸ் சேஞ்ச்."
" சேஞ்ச்."

என கத்த்க்கொண்டே இருக்கிறார்.. எவரும் கண்டுகொள்ளவில்லை.. பேருந்து கிளம்பியது.. அவர் இறங்கவே இல்லை.

மனம் நொந்து போனேன் அந்த சம்பவத்தால். மனதில் நெருடல் தொடங்கியது.. தமிழர்கள் மீது ஒரு வித வெறுப்பு வந்தது.


என்ன காரணம் இவர்களது அறியாமையா ? இல்லை கல்லாமையா.. ? புரியவில்லை எனக்கு.

நெருடலில் என்னுடன் வேலை பார்க்கும் சக வட இந்திய ஊழியரிடம் கேட்டேன்.. அவர் மிகவும் வருத்தப்பட்டு சில சம்பவங்களை கூறினார்.
எனது கல்லூரி நண்பன் அவன் மலையாளி. அவன் மதுரையில் என்னுடன் படித்தவன். அவனிடம் கேட்டதற்கு அப்படி தமிழர்கள் மீது மட்டும் தவறில்லை.. இது எங்க கேரளாவிலும் தமிழர்கள் இவ்வாறு கஷ்டப்படுவார்கள் என்று வருந்தினான்

அப்போதுதான் எனக்கு புரிந்தது.. அனைத்து மாநிலங்களிலும் பிற மாநிலத்தவர் வாழும்போது பலவிதமான கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்.

முன்பு - மன்னர்கள் காலம்
அதன் பின்பு - மக்களாட்சி மாறி இப்போது மக்களாட்சி வந்து இந்தியாவில் அனைத்து மாநிலத்தவரும் எல்லா இடத்திலும் பரவி வேலை பார்க்கவோ படிக்கவோ செய்கிறார்கள்..
இன்னும் சில ஆண்டுகளில் இந்திய முழுவதிலும் அனைவரும் பரவி அப்போது இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்ப்படுமென நம்புகிறேன்.

எழுதியவர் : கிருஷ்ணா (28-Mar-15, 8:50 pm)
Tanglish : vetrumaiyil otrumai
பார்வை : 804

மேலே