ஆதாயம்

மாலைகள் விழுவது
மரியாதை என்கிறோம்..

இப்போது விற்பனையாவது
மாலைகள் மட்டுமல்ல,
மரியாதையும்தான்-
விழும் மாலைகளுக்கு
விலைபேசி
முடிந்துவிட்டது முன்கூட்டியே..

மாலைகள் மணக்கின்றன,
அவை
வந்த வழி
வீசும் பிண நாற்றம்தான்..

ஆனாலும்,
ஆதாயம் வியாபாரிக்குத்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Mar-15, 7:02 am)
Tanglish : aathaayam
பார்வை : 102

மேலே