புண்ணாக்கு கவிதை
![](https://eluthu.com/images/loading.gif)
புண்ணாக்கு கவிதை
கவிதை எழுத
கரு கிடைக்கவில்லை
கவலை இல்லை
இருக்கவே இருக்கிறது
அடுத்தவர் கருவை
அறுத்தால் கவிதைதான்...!!
அண்டை வீடு…. எதிர்வீடு என்று
உலா வந்தால் போதும்...
எங்க வீட்டு குஷி..
உங்க வீட்டு குஷி இல்லை
அம்புட்டு குஷி.....
ஆங்காங்கே வலிகலுடன்
முனகல் சத்தங்களின்
இறக்குமதிகள்...
எழுத்து எழுத்தாய்
நொந்ததும்... வெந்ததும்...
சுமக்க முடியாத கவலைகளை
இறக்கி வைத்திருக்கலாம்
கண்ணீரும் கம்பலையுமாக....
எவனுக்கு எந்த கவலையாய்
இருந்தால் எனக்கென்ன கவலை??
கவிதை என்று உமிழ வேண்டும்....
உமிழ்தல்தான் எனது கருவே....
அடுத்தவர் அழுகை சத்தம்தான்
எனக்கு சந்தம்
வேறொருவன்/வேறொருத்தி முனகல்தான்
எனக்கு மோனை...எதுகை...
சிரசை பூமியில் நிறுத்தி
அப்படியே எழுதுவேன்....
ஆனாலும்
கற்பனை வளம் அதிகம் தான்
ஓடிக் கொண்டிருப்பவனை(ளை)
நிற்பதாக கூறலாம்
நின்று கொண்டிருப்பவனை(ளை)
உட்கார்ந்து கொண்டிருப்பதாக
வர்ணிக்கலாம்....
உட்கார்ந்து கொண்டிருப்பவனை(ளை)
...... ச்சீ... எழுத கூசுகிறது.....
காசா...?? பணமா...???
பொழுதினை போக்கிட
புதுமையான ஈட்டி எறிதல் விளையாட்டு
வெந்த புண்களில்....
இதற்கான சிங்ங்ங்... சக்க்குகளில்
உமிழ்தலும் தூள் பறப்பதால்
ஊர்ஜிதப் படுத்தப்படுகிறது
மனிதன் நர மாமிசம் உண்ணும்
அரக்கனாகியிருப்பதை...!!!
"ஏய்... நிப்பாட்டு... நிப்பாட்டு...
நீ பாட்டுக்கு ஏதோ கிறுக்குறே"
"யாரம்மா அது கவிதை எழுதும்போது??"
சுற்றிலும் நோக்குகிறேன்
யாருமில்லை.... என் மனசாட்சிதான்... !!
கிறுக்கல்தான் இவை
எவரின் ரணங்களையும்
கீறிப் பார்ப்பவை அல்ல..!!
இதுவும் புண்ணாக்கு கவிதையா??
புண்ணாக்கு கவிதைதான்
புண்ணாக்கும் கவிதை இல்லை..!!!
வினவியதும் விடையளித்ததும்
மனசாட்சியே...!!
எழுதியதில் தவறில்லை
இது புண்ணாக்கு கவிதையாகவே
இருந்துவிட்டு போகட்டும்..!!
(புண்ணாக்கு = பிண்ணாக்கு = மாட்டுத் தீவனம்)