நிலவோடு ஒரு கனவு
எனக்காய் மட்டுமே
எட்டி பார்த்து
நாணி சிவந்தது
நான் விதை போட்டு
வளர்த்து விட்ட
வெண்ணிலா
சற்று முன் தானே
சந்தித்தேன் என
பொய் கோபம் காட்டினேன்
இன்னும் கொஞ்ச நேரம்
என ஏக்கம் காட்டி
தோற்கடித்தது
மெய் மறந்து
சிவந்து சிலிர்த்தது
என் கன்னம்
கனவில் கண்ட
நிலவின்
அழகில்..