ஆன்மீகக் கணக்கு
குறள் அருட் பாக்கள்
வளமை வறுமை இரண்டிலுமே தெய்வம்
தொழலேஆன் மீகக் கணக்கு
தொழுதல் தொழுதேற்றிப் போற்றி தினமும்
வழிபடுதற் காக பிறப்பு
பிற்விப் பயனென்சொல் உண்டு உறங்கி
இறைநினைப் பில்லை யெனின்
இறைநினைந்து நித்தம் இருகரம் கூப்பு
குறையில்லை வாழ்வில் உனக்கு
குறையில்லா மல்மனித னில்லை உலகில்
இறைவனின்றி இல்லை உலகு
கவின் சாரலன்

