நல்மோட்சம் அடைவாய்
சாளரம் வீசாத சாடலில்
சாய்ந்த நான் இன்னும்
மீளாமல் தான் இருக்கிறேன் ...
@@@@========@@@@@
காக்கைப் பிடிக்குச் செவி சாய்க்காதவள்
இவளேந்தி எழுதும் எழுதுகோலின்
மையது மாய்ந்துவிட்ட மாகவிகளின்
செந்நீரால் நிரப்பப்பட்டது ....
மகாராணி சிம்மாசனத்தில்
நற்சிந்தனையை அமர்த்திவிட்டு
அக்கறை சிறகில் அக்னிபிழம்பேந்தி
அநீதியை கொளுத்தும் இவளின்
அரசானை கவியில் அலட்சியத்தைக் காண
கண்சிமிட்டாமல் படித்தாலும் இயலாது ...
கவிஞனின் கடமையைத் தவிர
அர்பணிப்பும் அலசலும் அலாதியாக
பொன்குவியலென பொதிந்து கிடக்கும் ..
சரிகமபதநி முதல் பரமபதம்வரை
பதம் பார்த்து இருக்கும் ! விரட்டியடித்தாலும்
துவண்டு வீழாத வார்த்தை செறிவில்
வாசகனின் இறுமாப்பு கட்டவிழும் ..
வாடிய இதயம் இவளது கவிநீரில்
ஒருசொட்டுப் பருகினாலே ஒருயுகம்
வாழ்ந்திட ஆதாரமாய் இருக்கும் ..
துளிப்பாக்களில் துள்ளலும் ,
அங்கதமும் அலட்டாமல்
அனைத்து அவலங்களையும்
சாட்டையால் அடித்து வெளுத்திருக்கும் ..
இலக்கியம் படிக்கவில்லை இருந்தும்
கவிதை எழுதும் ஆசையில் இங்கே
என் கிறுக்கல்கள் ...
என புதுஇலக்கியத்தைப் புத்தியில்
புகட்டும்,சிலநச்சுகளின் விடம் நீக்கும்!
பாவப்பட்ட கடத்தைநீ கங்கையில்
கழுவ வேண்டாம் இவளதுகவி
வரிகளில் நனைத்துவிடு நல்மோட்சம்
அடைவாய் .....
(விடுகையில் கூட ஒரு வணக்கம் சொல்லி அறிமுகமாகாத அன்பு அக்கா சொ .சாந்தி அவர்களுக்காக எழுதப்பட்டது )
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
