அன்றும் இன்றும் நீயும் நானும் -கருணா
எனக்கு திமிர் கொஞ்சம்
அதிகம் என்னும் நெஞ்சம்
அப்போதெல்லாம் இருந்தது..
உன்னைக் காணும் வரை..!
எனக்கு அறிவு அதிகம்..
கணக்கு அத்துபடி..
அப்போதெல்லாம் இப்படி
உன்னோடு பேசும் வரை..!
எனக்கு தோழர்கள் நிறைய..
அரட்டைகளும் கூட..
அப்போதெல்லாம் அப்படி..
உன்னோடு பழகும் வரை..!
எல்லோரும் நல்லவரே..
யாதும் எனது ஊரே ..
அப்போதெல்லாம் கொள்கை..
உன்னோடு சினேகமாகும் வரை..!
உன்னை விட அழகு
எவரும் இல்லை
அப்போதெல்லாம் என் எண்ணம்
உன்னைக் காதலிக்கும் வரை..!
உன்னைப் போல் மங்கை
உலகத்தில் இல்லை
அப்போதெல்லாம் என் பார்வை
உன்னை மணக்கும் வரை..!
இதற்கு மேல் எழுத
தமிழில் வார்த்தை இல்லை
இப்போதெல்லாம் நான்
நான் ரொம்ப நல்ல பிள்ளை
அடி வாங்கி சாவதில்லை !
டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு..!
வம்பெல்லாம் எனக்கெதுக்கு !
ஹா..ஹாங் ..
ஹோ...ஹோய்....!