அமைதியின் கதவுகளை நம்பிக்கை எனும் சாவியே திறக்கும்
அமைதியின் கதவுகளை 'நம்பிக்கை' எனும் சாவியே திறக்கும்
-------------------------------------------------------------------------------------------------
இது ஒரு மொழி பெயர்ப்புக் கட்டுரை ... படித்ததில் பிடித்தது மொழி பெயர்த்துப் பகிர்ந்துள்ளேன்.... நன்றி
Note:1 This is a translation from one chapter of the book "Unposted letter" by Shri TT Ranga Rajan. Rajan, who is affectionately referred to as the 'Voice of Love', is a spiritualist, endowed with a deep connectivity to existence. He guides people in their quest for self-realisation..
Note 2: There may be some omissions while translating the writing of the original author....
===========================================================
உங்களுக்கு நேற்று என்ன நடந்ததோ, நீங்கள் உலகத்திற்கு என்ன செய்தீர்களோ, உலகம் உங்களுக்கு என்ன செய்ததோ, எது எப்படி இருந்திருந்தாலும், நீங்கள் தினம் காலை எழுந்து இந்த உலகத்தை மீண்டும் தொடர்ந்து நம்பித்தான் ஆக வேண்டும். இது சொல்வது மிக எளிது, அறிவேன். ஆனால் உங்களுக்கு வேறு வழி இல்லை - நிச்சயமாக வேறு வழியில்லை - ஏனெனில் உங்கள் மன அமைதி உங்கள் நம்புதலுடன் பின்னிப் பிணைந்துளளது. நம்புதல் இல்லாமல் அமைதி இல்லை. நம்பிக்கையின்மை உங்களை மன உளைச்சலில் தள்ளி விடும்.
பல ஆயிரம் முறை நீங்கள் பொது வாகனம் பயன் படுத்தும் போது சில முறை உங்கள் பணப்பை திருடப் படலாம். நீங்கள் உலகத்தை நம்பாமல், சில நிமிடங்களுக்கு ஒரு முறை உங்கள் பணப்பை இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொண்டிருத்தாலும் ஒரு திறமையான திருடன் ஒரு நாள் உங்கள் பணப்பையைத திருடக் கூடும்..... ஆனால் உங்கள் செயலால் நீங்கள் பல ஆயிரம் கணங்கள் அமைதியாய் இருக்கும் தருணங்களை இழந்திருபபீர்கள். ஒவ்வொரு சக பயணியும் திருடனாக இருப்பானோ என்று கண்கள் சந்தேகப் பட மனம் அத்தனை முறை அமைதியை இழந்திருக்கும். மாறாக நம்பிக்கை வைத்தால் பயணம் அமைதியாகவும் இனிமையாகவும் இருந்திருக்கும். .
ஒரு வேலையாள் உங்களுக்கு நம்பிக்கை த்ரோகம் செய்யலாம். இருந்தும் மற்றவர்களை நம்புங்கள். ஒரு முக்கியமான உறவு உங்கள் நல்ல குணத்தை பலவீனமாக கருதலாம், உங்கள் நம்பிக்கையை பயன் படுத்தி உங்களிடம் சுரண்டலாம்.. மீண்டும் மறு நாள் எழுந்து, மீண்டும் நம்பிக்கை வைக்கத் தொடங்குங்கள். நான் சொல்வது சற்று ஏமாளித்தனமாகத் தெரியலாம், நான் உங்களுக்கு அமைதியின் கதவைக் காண்பிக்கிறேன், அது நம்பிக்கையால் தான் திறக்கும்.
நீங்கள் அமைதியை விரும்புகிறீர்கள் என்றால், உங்களை நேற்று யாராவது ஏமாற்றி இருந்தால், உங்களுக்கு அடுதத நாள் எழுந்து இந்த உல்கத்தை நம்புவதைத் தவிர வேறு பாதை இல்லை. என்னை யாராவது ஏமற்றினால் நான் எனக்குள் சொல்லிக் கொள்வது
"நன்றி கடவுளே! நான் ஏமாற்றப் பட்டேன், ஆனால் நான் யாரையும் ஏமாற்ற வில்லை; எனக்கு நம்பிக்கை த்ரோகம் செய்யப்பட்டது, நான் யாருக்கும் நம்பிக்கை த்ரொகம் செய்யவில்லை; நான் புண் பட்டேன், யாரையும் நான் புண்படுத்த வில்லை; நான் துன்பம் அடைந்தேன், மற்றவர்க்கு துன்பம் செய்ய வில்லை"
நாம் தினம் காலை இந்த உலகம் இன்று முதல் நம்பிக்கை உடையதாகும் என்று நம்புவோம்... இந்த உலகம் பல கோடி முறை நம் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்கும்... பல முறை இருக்காது... நம் நம்புதலைச் சார்ந்திருக்கும் சாத்தியக் கூறுகளே அதிகம்... நம் இதயமும் எண்ணங்களும் அந்த நம்பிக்கையின் பக்கம் சாய்ந்து இருக்கட்டும்.
அமைதிக்கு ஒரே வழி 'நம்பிக்கை'