நான் என்ன செய்ய

அப்பாக்கு ஆஸ்துமா, தங்கசிக்கு கல்யாணம் பண்ணனும், என் மனைவி பார்வையில் 1000 கேள்விகள், என் குழந்தை எதிர்காலம் என்னை வதைக்கிறது, அம்மா உடல் இளைகிறாள், தனி ஒரு ஆளாய்
நான் என்ன செய்ய?
கடவுள் இல்லை என்பதில் உறுதிகொண்டேன், எனக்கு இந்த சமுகத்தில் வேலை இல்லை என்பதிலும் உறுதிகொண்டேன், வாழ்வதை விட சாவது கொடுமை. நான் உயிருடன் இருக்கும் போதே என் சூழ்நிலை இப்படி..போனால்???? என் பரம்பரை???
சிபாரிசு, பணம், நடிப்பு, பொய் புகழ்ச்சி, தவறே ஆனாலும் தலை ஆட்டுதல்....சமுகம் இப்படி.. இருந்தால்
நான் என்ன செய்ய?
தனியாக புலம்பிய கண்ணனை கண்டு கண் சிமிட்டியது கைபேசி...
எடுத்து பார்த்தான் .. குறுஞ்செய்தி.
"உங்கள் நேர்மையை பாராட்டி விருது "
welcome !!
பார்த்தவனுக்கு படபடப்பு.
நான் என்ன செய்ய?
சோறு கேட்ட, கொலம்புதராங்க.
இபோ நான் என்ன செய்ய?

எழுதியவர் : ajantha (1-Apr-15, 8:44 pm)
Tanglish : yenna seiya
பார்வை : 354

மேலே