முற்றுபெறா அவாக்கள்

ஆசை
அன்னை மடியில் முகம் புதைத்து
கனவுகளை உறக்கத்தில் புதைக்க

ஆசை
தோள்மேல் அமர்ந்து அழகிய உலகை
காதுகளினூடு கண்களில் காட்ட

ஆசை
அறிந்த அவாவில் அறியாத அறிவை
புகட்டி சகோதர சண்டையிட

ஆசை
மங்கும் மாலையில் அங்கும் இங்கும்
ஒளிந்து குழப்பங்களை ஒழிக்க

ஆசை
விடியும் கதிரையும் வடியும் இருளையும்
கூவும்குயிலை ஒறுசேர ரசிக்க

ஆசை
ஓடை இசைக்க நதியில் கலக்க
ஓடையில் கைக்கோர்க்க ஆசை

ஆசை
மண் பாதத்தை முத்தமிட தென்றல்
தொட தேகம் சிலிர்க்க

இன்னும்
முற்றுப்புள்ளி இடா ஆசைகள்
பட்டியலிலும் முற்று பெறாமல்

அவாக்களாய்...

இரா நவீன் குமார்

எழுதியவர் : இரா நவீன் குமார் (2-Apr-15, 5:09 pm)
சேர்த்தது : ரா நவீன் குமார்
பார்வை : 53

மேலே