எங்களுக்கும் இல்லமுண்டு சொந்தமுண்டு- சகி

எங்கள் வாழ்க்கை
தாய்பாலின் சுவை
அறிந்ததில்லை ...
தந்தையின் பாசம்
அறியவில்லை ...
பிறந்தநாள் இன்னாளென்று
அறிந்ததில்லை ....
தாய் மடிதந்த
சுகம் கண்டதில்லை ....
தந்தைத்தோள் சாய்ந்து
சந்தோசம் கண்டதில்லை
அன்னையின் அன்பு
அறிந்ததில்லை ...
சுமந்தவளுக்குமே நாங்கலேனோ
பாரமாகிப்போனோம் ....
காண்பவரின் கண்களுக்கும்
அனாதையாகிப்போனோம் ...
ஆறுதல் தர எங்களுக்கும்
இல்லமுண்டு என்பதயும்
உணர்ந்தோம்....
எங்களைப்பார்க்கும் விழிகளில்
ஏனோ அனுதாபங்கள் ...
சகோதர சகோதிரிகளை
உணர்ந்தோம் எங்கள்
குடும்ப இல்லங்களில் ....
எங்களுக்கும் இல்லமுண்டு
சொந்தமுண்டு....
நாங்கள் யாவருமே
அனாதைகள் இல்லை ..