நான் பெத்த மகனே
**************நான் பெத்த மகனே ************
கருவேலன்காடும்
கால் வடிச்ச கண்ணீரும்
கதை கதையாய் சொல்லி அழும்
சுள்ளி சுமந்த கதையெல்லாம் ......
கால் தச்ச முள்லெடுத்து
கால் வலிக்கு நான் தடவ
சீமத்தண்ணி ஊத்தி வச்ச
சீசா கிட்ட கேட்டுப்பாரு.....
காடு கரை அடகு வச்சே
கட்டை விரல் கரைஞ்சுடுச்சு
மண்ணே உன்ன விலை கொடுத்து
மகனே உன்ன படிக்க வச்சேன்
மனுச மக்க மதிக்க வச்சேன் ......
மண்ணாளும் மகராசா
மணமுடிக்க காத்திருக்கா
மாமன் மக அழகம்மா
வெள்ளந்தி மனசெல்லாம்
விதைநெல்லா நீ இருக்க
விஷக்காயை விதைச்சாயே.....
நெஞ்சமெல்லாம் நீ இருக்க
நெருஞ்சியால அடிச்சாயே
தலைச்சுமையா தூக்கி அலைஞ்சேன்
தாயென்ன சுமைன்னு
தவிக்கவிட்டு போனாயே
நாகரிகம் தெரியாக் கிழவி
நடுவீட்டில வேணாம்னு
நட்டாத்துல விட்டாயே
உன் கார வீடு எனக்கு வேணாம்
கட்டில் மெத்த எனக்கு வேணாம்
உசிரோட உறைந்சிருக்கும்
சேர்த்து வச்ச கதையெல்லாம்
உன் புள்ள காதோரமா
ஒரே ஒரு தடவை
ஆராரோ ஆரிராரோவா
அது போதும்
நான் பெத்த மகனே ...........
*****************பார்த்தீபன் திலீபன் ************
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
