என் கைக்கடிகாரம்
என் அம்மாவின் அன்பளிப்பு ....
முதல் பார்வையில் உன் மேல் நான் கொண்ட காதால் அவ்வப்போது என் பார்வை உன் மீது...
பிரதிபலன் இல்லாமல் என் பலனுக்காக ஓயாமல் உழைப்பதில் என் தாய்க்கு அடுத்து நீ …
என் பரபரப்பான நேரத்தில் எனக்கு நிகரான வேகத்தில் நீ…
என் அமைதியான நேரத்தில் நிசப்தமாய் நீ,
மகிழ்ச்சி தருணங்களில் மெது மெதுவாய்,
என் வெற்றியில் ஆரவாரமாய், தோல்வியில் தோள் கொடுக்கும் தோழனாய்...
என் கையில் உள்ள நம்பிக்கை....
நொடி பொழுதும் பிரிந்ததில்லை...
உனக்காக ஓடியதாய் ஒருபோதும் கண்டதில்லை...
எனக்காகவே ஓடி ஓடி களையிழந்து , நிறமிழந்து , செயலிழந்து போன போதும்
குறையாத காதலோடு நான் , பொக்கிஷமாய் என் அலமாரியில் நீ ..