உயிரற்ற காதலன் !

நான் உயிர் கொண்டிருக்கும்

போது மௌனங்களினால்

என்னை வென்றாய்

காதல் சொல்லாமல்

இன்று கண்ணீர் சிந்துகிறாய்

உன் காதல் உரைக்க

என் பிரேதத்தின் முன் நின்று

என்ன பயன் சொல்லு

காதலி காலம் தவறி விட்டாய்

இருந்தும் வாழுவேன்

உன் சுவாசத்தோடு கலந்து !

எழுதியவர் : dpa (1-May-11, 1:19 pm)
பார்வை : 364

மேலே