புல்வெளி

தேன்நிலவு வந்தோம்
தேடி தேடி பார்த்தோம்
புல்வெளியில்
மலைமுகடுகளில்
மரம் செடி கொடிகளில்
அருவிகளில் சுனையில்
கொண்டை ஊசி வளைவுகளில்
எங்கள் இருவரின்
உடலும் மனமும்
ஆயுளும் ஆன்மாவும்
இன்னும் பின்னி பிணைக்க
மஞ்சள் கயிறும் மீறி
சக்தி வாய்ந்த மாய கயிறு
உண்டோ என்று
கண்டோம் இன்று

எழுதியவர் : கார்முகில் (4-Apr-15, 8:21 pm)
சேர்த்தது : karmugil
Tanglish : pulveli
பார்வை : 55

மேலே