கடற்கரை ஊடல்
நிலவு எழும்பும் நேரம்
கடல் அலைகளின் தாளம்
ஈர மணலில் கால்கள் பதியும்
மனதில் கோபம் தணலை மூட்டும்
எங்களுக்கு ஒதுக்க நேரம் இல்லை
அழைத்து செல்ல நாட்டம் இல்லை
வேலை வேலை இன்னும் வேலை
உதாசீனத்திற்கு அளவே இல்லை
சீக்கிரம் வந்து உங்களுடன்
சேர்ந்து நேரம் கழிக்கிறேன்
என்ற பொய் வார்த்தைக்கு
ஏமாந்து ஏமாந்து மரத்து
போனது தான் எங்கள் நிலை