தோழியோடு சண்டை

தோழியே
கோபத்தின் விளிம்பில்
இருவரும் இருக்கிறோம்

சண்டையில்
காக்கை ,கழுகாக
இருந்தாலும் பரவில்லை

சம பலம் கொண்ட
நாய்களாகவே இருக்கிறோம்

கர்வம்
மனதை கட்டிவிட்டது
நீ நெஞ்சு அழுத்த காரி
நான் நெஞ்சு அழுத்த காரன்

முன்பு ஒரு சண்டையில்
நீர் உற்றி அணைத்தேன்
அந்த நீரே இப்பொழுது
கொதிக்கிறது

நீ சாம்பல் போட்டு அணைத்தாய்
சாம்பலே எரிமலையாய்
தீயை கக்குகிறது

என் மன கடலில்
உனக்காக எழும்
வார்த்தை அலைகள் கரையை தொடாமல் இருக்க
பற்கள் என்னும் பாறையை போட்டு நிறுத்துகிறேன்

சுடர் விளக்கே உன்னை
காற்று அணைக்க கூடாதுன்
என்பதால் தான் உள்ளங்கையால்
மூடுகிரேன்

ஆனால் neeyo என்
உள்ளங்கைக்கு தீ மூட்டுகிராய்

நண்பன் என்ற முறையில்
சூரிய ஒளியாய் உன்னோடு
வருகிறேன்

நீ சுடுகிறாய் என்று
நிழல் தேடி ஒலிகிறாய்

அந்த நிழலில்
நிஜங்கள் மறைக்கபடுகிறது
தோழி

ஒரு பெண்ணோடு பேச
காமமும் காதலும் தான் முகவரி
தருகிறது

அப்படி ஒரு எண்ணம்
அணு அளவுகுட எழவில்லை
அன்பே

உன்னை தோழியாக நினைக்க வில்லை
தோழனாக பார்க்கிறேன்

என் கதாதலி இடம் கூட
இவ்வளவு ஆழமான சண்டை
போட்டது இல்லை

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (5-Apr-15, 8:28 pm)
சேர்த்தது : பன்னீர் கார்க்கி
பார்வை : 2666

மேலே