இறுதிவரை உன்னோடு

எத்தனை பக்கங்கள்
வாழ்வில்
இனிமையாய் வந்தாலும்,
நீ என் பக்கம் வந்ததுபோல்
இனிமை எதுவுமில்லை.

இரவின் நீளம்
விளங்கச்செய்தாய்,
நினைவின் ஆழத்தில்
மூழ்கச்செய்தாய்,
உன்னை நினைத்து
கவிதை எழுதினால்,
உலகத்தையே எழுதுவதாய்
பிரம்மிக்கிறேன்.

காற்றை கையில் பிடிக்க
கற்றுத்தந்தாய்,
நெருப்புக்குள் நிற்கவும் வைத்தாய்,
நீருக்குள் நடக்கவும் வைத்தாய்,
நிலத்தை தலைக்குமேல் வைத்தாய்,
ஆகாயத்தை காலடியில் போட்டாய்,
இத்தனைக்கும் மத்தியில்
என்னை உயிரோடு வைத்தாய்.

அழியாத வாழ்வு கொண்டாய்,
யாரும் அறியாமலே வந்தாய்,
எத்தனை எத்தனை கூறினும்
உண்மையில் உன்னை பெற்றவர்,
யாவரும் இறுதிவரை
உன்னோடு வாழ்வதில்லை,
வாழ்ந்திருந்தால் உன்னை
எதிர்ப்பதற்கென்று, யாரும்
இருக்கப்போவதில்லை.

ஏ காதல் தெய்வமே
எல்லோருக்குள்ளும்
நீ வருகிறாய். ஆனால்,
இறுதிவரை ஏன் இருப்பதில்லை
மன்னிக்கவும்,
இறுதிவரை ஏன் அனைவரும்
உன்னோடு இருப்பதில்லை?

எழுதியவர் : வென்றான் (6-Apr-15, 11:05 pm)
Tanglish : iruthivarai unnodu
பார்வை : 109

மேலே