அவளின் வலிகள் - சகி

வலிகள் ....

மனமென்னும் தன்னுலகில்
மணாளனாய் அவனை
மணமுடித்தால் அவள் ....

இவ்வுலகம் உள்ளவரை
அவனுடன் இல்லற வாழ்வை
மகிழ்ச்சியுடனே கழிக்க
எண்ணினாள் கன்னியவள் ...

தன்னை முழுதுமாய்
உள்ளத்தால் உணர்ந்த
உன்னதமானவன் அவன்
மட்டுமே என எண்ணினாள் ...

உரிமைக்கொண்டு வரும்
வார்த்தைகளில் மனம்
நெகிழ்ந்துப்போனாள் ......

மணமாலை சூடும்முன்னே
மலடி என்ற பட்டத்தை
வென்றாள்...

மணமாகி நாளை
நீ தாயாகும் தகுதியை
இழந்தால் மறுமணம்
முடிப்பேன் என்றான் ....

அவள்மனதில் கட்டிவைத்த
கல்யாணக்கனவு கலைந்தே
போனது .....

அவன் யதார்த்தமாகவே
அவ்வார்த்தைகளை
விட்டெரிந்தாலும் உடைந்தது
என்னவோ அவள் மனம் ...

சிதறிய கண்ணீர்த்துளிகளும்
இதயமும் வலிகளை
சுமந்துகொண்டே
கன்னியவள் வாழ்க்கைப்பாதை ....

தொடரும் ......................................................

எழுதியவர் : sagi (8-Apr-15, 12:07 pm)
சேர்த்தது : சங்கீதா
பார்வை : 332

மேலே