துளிப்பாக்கள் - 1

@@@@@@@@@@@@@@@@@@@@@@
கண்கள்
இதயத்திற்கு செய்யும் துரோகம்
காதல்
@@@@@@@@@@@@@@@@@@@@@@
வெளியில் தொங்க விட்டதற்காக
முறைத்தபடி கோபம் கொண்டன
திருஷ்டி பொம்மைகள்
@@@@@@@@@@@@@@@@@@@@@@
புதிய வெளிநாட்டு தொழிற்சாலையால்
கருத்தடை செய்யப்பட்டன
கழனிகள்
@@@@@@@@@@@@@@@@@@@@@@
கண்ணாடி அலமாரிக்குள்
அலறிக் கொண்டிருக்கின்றன சிறைபட்ட
புத்தகங்கள்
@@@@@@@@@@@@@@@@@@@@@@
தூக்கில் தொங்கியது
நீர் அற்ற கேணியில்
வாளி!
@@@@@@@@@@@@@@@@@@@@@@
சுத்தமானது குடுவை
அசுத்தமானது குடல்
மதுவால்....
@@@@@@@@@@@@@@@@@@@@@@
கைப்பேசி
விரல்பேசி களாகிவிடுகின்றன
குறுஞ்செய்திகளால்
@@@@@@@@@@@@@@@@@@@@@@