ஏனாம் இந்த ஏளனப்பார்வை

நித்திய தீரருக்கு நோபல் இல்லை ஏனாம்?
நடிகர் திலகதிற்கு தேசிய விருதில்லை ஏனாம்?
மீனவன் மீனுக்கு இரையாவது ஏனாம்?
இனப்படுகொலைக்கு 'இ'(ந்தியா) எழவில்லை ஏனாம்?
அணுவை விதைத்து அழிவை பெறுவது ஏனாம்?
மீத்தேன் உறிஞ்சி நிலத்தை பாலையாக்குவது ஏனாம்?
தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லை ஏனாம்?
சிறிதாய் கசியும் நீரைக்கூட அணைப்போட்டு தடுப்பது ஏனாம்?
செம்மரம் எனக்கூறி கொன்றது ஏனாம்?
செம்மொழி எனக்கூறி சமஸ்கிருதம் திணிப்பது ஏனாம்?
தமிழன் என தலை நிமிர்ந்தால்
தலையில் குட்டுவது ஏனாம்?
தாய் நாட்டில் தமிழ்நாட்டிற்கு
இந்த பாகுபாடு ஏனாம்?
என் மண் மீதும் என் மக்கள் மீதும்
ஏனாம் இந்த ஏளனப்பார்வை ??
தெரிந்தவர் பதில் கூறலாம்
எம் வினாக்களுக்கு ...
-ஜெயக்குமார் கல்யாணசுந்தரம்.