உயிரின் விலை

கறி எடை கிலோ - 140 ரூபாய்
உயிர் எடை கிலோ - 120 ரூபாய்
சின்னமுத்து சிக்கன் ஷாப்பின்
விலைப் பட்டியல் அறிவிப்பு !

உயிர் எடை விலை குறைவு ?
சார் ! பிரயோஜனம் இல்லாத தலையும்
சிறகும் அலகும் உயிரும் எடுத்திட்டா
மிஞ்சிப் போகும் கறிக்குத்தான் மதிப்பு !
சின்னமுத்துவின் விளக்கம் !

உயிரின் விலை என்ன என
உலகு தேடும் தத்துவ கேள்விக்கு
எதார்த்தமான பதில் கிடைக்க -
சார்! ஒரு உயிர் போதுமா உங்களுக்கு ?
சின்னமுத்துவின் கேள்வி !!!!!!!!!

எழுதியவர் : ஜி ராஜன் (9-Apr-15, 1:35 pm)
Tanglish : uyeerin vilai
பார்வை : 103

மேலே