காந்தநிழலுக்குள் கைதியாகினேன்
உன் காந்தநிழலுக்குள்
கைதியாகினேன்....
கந்தககுளிருக்குள் நானே
கதையாகினேன்......!!!!
கை முளைத்து
கால் முளைத்து
கருவிலிருந்து
விழுகிறேன் கதறியபடி....
எனைக்கதற வைத்து
நீ
கல்லறை செல்வ தெப்படி.....????
இன்றெனக்கு பிறந்தநாள்
யில்லை யில்லை
நீ யில்லா இவ்வுலகில்
நா னெனை இழந்தநாள்......!!!!
அக்னபிரவேசம் எழுதிய
கையில் தீ வைக்க
மனம் வருமோ????
ஆண்டவனைக் கண்டிருந்தால்
கேட்டிருப்பேன்
மீண்டு முனக்கொரு
ஜனனம் வருமோ...."!!
காளனவன் திருடி விட்டான்
உன் தலை யெழுத்தை......
காளனுக்கே எழுதிக் கொடுத்தாய்
உன் கை யெழுத்தை....
கதைக்குள்ளே உன் கருவறை
கருவறையே உன் கல்லறை....
ஏன் வந்தது இன்றெனக்கு
பிறந்த நாள்.....
இனி வருடந்தோறும்
உனை நினைத்தே வரும்
உன் நினைவு நாளாகிய
யென் பிறந்தநாள்........!!??