தளையே பிறழாப்பா தா

காசினியில் நானும் கவிவனைய வந்திட்டேன் .
மாசற்ற செந்தமிழ் மங்கையே - பாசம்
விளைத்தேனே உன்றன்மேல் விண்ணுலகம் போற்ற
தளையே பிறழாப்பா தா .

பாசத் தமிழ்த்தாயே பக்தைநான் உன்னைப்
பேசப் பரவசமே பெற்றேனே - மோசத்
தளைகளும் சேராமல் தானொளிரும் வண்ணம்
தளையே பிறழாப்பா தா .

மாசற்ற செந்தமிழே மாதவப்பே றேன்றுன்னைப்
பேசுகிறேன் நானுன்றன் பக்தியே - வீசும்
களையாக நானும் கவியெழுத வந்தேனே
தளையே பிறழாப்பா தா .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (9-Apr-15, 8:11 pm)
பார்வை : 69

மேலே