பறந்தலையும் இறகுகளற்ற
முகமணைக்கும் தென்றலும்
பரவசச் கூக்குரலிடும் பூக்களும்
குழந்தையின் ஸ்பரிசமும்
உறவுகளின் கதகதப்பும்
வழிப்போக்கனொருவனின் யாசகமும்
விழுந்துகிடந்தவொருவனின் இயலாமையும்
இதயத்தைத் நனைக்கவிடாதே
தீராத மனக்கதிகளின் கேள்வி முனைகளில்
நீதி சொல்லும் வாய் யாவிலும்
கசங்கிக்கொண்டிருந்த நாட்களின் மத்தியில்
கடைசிக்கு கொஞ்சமாவது கையில் வேண்டுபவன்
கணங்களில் அங்கிங்கென விளையாட்டுக் காட்டுகிறது
பறந்தலையும் இறகுகளற்ற பணமெனும் காகிதப் பட்சிகள்...