எங்கிருந்ததோ ஒருகுரல்
மொட்டை மாடி
மௌனங்கள் பேசும் இரவு
மழைத் துளிக்ளின் வருடல்கள்
ஏகாந்தம் .. ஏக்கம் ..
ஏமாற்றம் ..
எதுவும் இல்லா சூன்யம்
எதைத் தேடுகிறது மனசு ?
ஒன்றும் இல்லை
ஆனாலும் குறுகுறுப்பு
களைத்துப் போன கண்கள்
இமைகள் தழுவிக்கொண்ட போது
எங்கிருந்ததோ ஒருகுரல் கேட்டது..
நீ யார்?
ஆமாம் நான் யார்?