காதலும் தன்னிரக்கமும்தொடர் கட்டுரை01

இன்றைய காதல் உணர்வு பற்றிய பெரும்பாலான பாடல்கள் ‘தன்னிரக்கம்’ ‘கழிவிரக்கம்’ ‘ஆற்றாமை’ ‘தோல்வி மனப்பான்மை’ ‘விரக்தி’ போன்ற உணர்வுகளைக் காட்டுவனவாகவே உள்ளன. இது தேவையா? அவசியமா? நல்லதா? இதற்கு மாற்று இல்லையா என்பன போன்ற எண்ணங்கள் என்னுள் அவ்வப்பொழுது எழும்பியதுண்டு. அவ்வாறான வேளைகளிலேதான் நான் இப்படிப் பட்ட பாடல்களை எழுதினேனோ என்று கூட இப்பொழுது எண்ணிப்பார்க்கிறேன்:

“அச்சம் தன்னை விலக்கிவிடு!
அஞ்சாமை நெஞ்சில் விதைத்துவிடு !
துச்சம் எனத்துயர் ஒதுக்கிவிடு!
துணிவைச் செயலில் தூக்கியெடு!
கொச்சைப் பேச்சை நீக்கிவிடு!
குழந்தை மனத்தை ஊக்கிவிடு!
பிச்சை வாழ்க்கை வெறுத்துவிடு!
பின்னும் அவர்க்கே உதவிவிடு!

துணிவை வாழ்வில் துணையாக்கு!
துன்பம் தடுக்கும் அணையாக்கு!
துணிவைச் செயல்களின் உரமாக்கு!
தொடரும் பயன்களைப் பிறர்க்காக்கு!

அன்போ தென்றல் தாலாட்டு!
அடிக்கும் புயல்முன் துணிவேற்று!
தென்போ டிருக்க விளையாட்டு!
திறமை விளங்க துணிவாட்டு “ எழுத்து 031/31-08-12.


அப்படியென்றால் நான் தோல்வி மனப்பான்மையோடும் விரக்தியுணர்வோடும் எழுதியதில்லையா என்று என்னையே கேட்டுப் பார்த்துக்கொண்டபொழுது.....கண்டதென்ன?-----------------இன்னும் வரும்....

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (10-Apr-15, 7:40 pm)
பார்வை : 99

மேலே