கேட்டதை வாங்கித்தரும் அப்பா சாமி

அப்பாவும் மகள் அபியும் அலாவுதினீன் அற்புத விளக்கு படம்
பார்த்து கொண்டு இருந்தனர்.

அபி:அப்பா.

அப்பா:என்னடா அபி கண்ணா?

அபி:அது என்ன அப்பா பெருசா இருக்கு?

அப்பா:அது தாண்டா பூதம்.

அபி:அது என்னப்பா பண்ணும்?

அப்பா:அது அலாவுதீன் கேக்குறது எல்லாம் கொடுக்கும்.

அபி:என்ன கேட்டாலும் கொடுக்குமாப்பா?

அப்பா:ஆமா அபி உனக்கு வேணுமா அது மாதிரி பூதம்?

அபி:எனக்கு வேணாம்பா.அலாவுதீன் கிட்ட அப்பா இல்ல.அதனால தான்
சாமி பூதம் கொடுத்து இருக்காரு எனக்கு அப்பா இருக்காரே கேட்டா எல்லாம்
வாங்கி கொடுக்க.எனக்கு சாமி கொடுத்த அற்புத விளக்கு அப்பா தான்.........!!!!.

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (11-Apr-15, 10:13 am)
பார்வை : 341

மேலே