அடையாளம் தெரியவில்லை
அடையாளம் தெரியவில்லை.
===============================================ருத்ரா
பயம் தோன்றிய போது
மதம் தோன்றியது.
பயம் தெளிந்த போது
மனிதன் தோன்றினான்
மனிதனுக்குள்ளிருந்து
மீண்டும்
மிருகம் தோன்றியது.
கோரைப்பல்லும் கொம்பும்
குடல் கிழிப்பதும்
எங்கும் நடக்கிறது.
தனி மனிதன்
வெற்றி பெற்றே தீருவேன்
என்று
தடங்களை எல்லாம் அழிக்கின்றான்.
ஒரு நாள் கண்ணாடியில்
முகம் பார்த்தான்.
எங்கே நான் ?
பயந்து
குதி கால் பிடரி தெறிக்க ஓடுகிறான்.
பங்குகளை பெருக்கி
லாபம் பெருக்கும் வேட்டையில்
அவனே அம்புகள் பெய்து
சல்லடையாகிப்போனான்.
அது யார்?
அடையாளம் தெரியவில்லை.
====================================================