கண்ணீர் நிரந்தரமா
உயிரில் எழுதிய எந்தன் கவிதை
உறவை பிரித்ததடா
மனசில் எழுதிய எந்தன் காதல்
மண்ணில் புதைந்ததடா
விடியலை தருகின்ற கதிரவன் கூட
விண்ணில் இல்லையடா
ஏகாந்தம் தரும் இனிமைகள் கூட
என்னில் இல்லையடா
கண்கள் பேசும் காதல் எல்லாம்
கல்லறை சென்றிடுமா
காதல் எழுதும் கவிதைகள் எல்லாம்
கண்ணீர் சுமந்திடுமா
கடவுள் எழுதும் கதையிலும் கூட
காதல் பொய்யானதா
கனவுகள் எழுதும் கதையிலும் கூட
கண்ணீர் நிரந்தரமா

