ஒரு சட்டையே போதுமப்பா

அப்பாவிடம் கேட்டேன்
ஏன் எனக்கு தினமும்
இரு சட்டை அணிவிக்கிறீர்கள் என்று
என்ன சட்டை என்றார்
மதம் என்னும் சட்டையையும்
சாதி என்னும் சட்டையையும்
நாம் மனிதர்கள் அப்பா
மிருகத்தைப் போல் ரகம் பிரிக்காதீர்
நான் மனிதனாக வாழ – என்
மானம் என்னும் ஒரு சட்டையே போதுமப்பா ……….!

எழுதியவர் : ராஜா (12-Apr-15, 2:34 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 69

மேலே