சினிமா
சினிமாவில் ,
பார்ப்பது,
கவர்ச்சி.
சொல்வது,
குளிர்ச்சி.
கடைச்சரக்கு,
காசாகிறது.
காண்பவரின் மனம்,
கசடாகிறது.
இருட்டில் நேரம்,
வீணாகிறது.
உண்மை என்ன சொல்கிறார்?
இல்லாததைச் சொல்லி, கெடுக்கிறார்.
இயல்பாய் ஏதும் உண்டா?
காசு ,பணம் புரளுகிறது ,
கறுப்புப் பணம்நேராகிறது .
பண்பும் ,பண்பாடும் பாழாகிறது .
உழைப்பின், உண்மை தெரியாமல் ,
உறங்கிக் கிடக்கும் மக்கள் ,
ரசிகன் என்று வெளியாகும் முதல் நாளே ,
படம் பார்க்க தறிகெட்டு அலைகிறான் .
என்று மாறுவரோ ?
தமிழா ! நினைத்துப்பார்
உணர்ந்துவிடு , மாறிவிடு.