வெளிச்சத்தின் நிழல்

எனது இறுமாப்புகளைப்
போலல்லாது
வேகத்தடையில் வளைந்திருக்கும்...

நான் ஒதுங்கிவிட்டிருந்த
மரங்கள் கிழித்தும்
தொடர்ந்திருக்கும்.....

எப்பொழுதும் தொடர்ந்திருக்குமாயது
ஒருபொழுதும் என்மேல்
விழுவதோ.... விழுந்ததோ இல்லை...

என்னுடையதென
உரிமை எடுக்கும் பொழுதுகளில்
என்னையறியாமல்
நீண்டோ குறுகியோ விட்டிருக்கும்...

எப்படி இருக்கிறாய் என் நிழலே...?
தவறுதலாய் நலம்
விசாரித்திருந்த ஒரு இருட்டறை நாளில்
எனக்கான பதில்
வந்திருக்கவில்லை.....!!

தேடல் முயற்சியாய்
தீக்குச்சி கொளுத்த.... பின்னிலிருந்து
பிரம்மாண்டமாய் பதில்...

நான் உன்னுடையவன்
அல்ல....
வெளிச்சத்தினுடையவன்....!!

எழுதியவர் : நல்லை.சரவணா (14-Apr-15, 8:52 pm)
Tanglish : velichathin nizhal
பார்வை : 155

மேலே