நல்லா வாங்கினோம் நள்ளிரவில்

சங்கம்
வைக்க கூட
உரிமையில்லை..

எட்டு மணிநேர
வேலை என்பது
ஏட்டில் படித்தது...

எண்பது சதவீதம்
வாங்கிக் கிழித்தவன்
இன்னும் அலைகிறான்..

செமஸ்டர் லீவில்
ஜாவாவோ சியோ
படித்தவன் பிழைத்தான்
என்பதெல்லாம் இருக்கட்டும்..

குறைந்தபட்சம் சில
ஒப்பந்தங்களுக்கு
பின்னாவது
நிறுவனம் வைக்க
அனுமதி தரலாம்..

நள்ளிரவோ
நண்பகலோ
மாறுவது கூட
தெரியாமல்
புழுங்குகிறான்
ஏசி அறையில்..

நல்லா வாங்கினோம்
நள்ளிரவில் சுதந்திரம்..
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (14-Apr-15, 7:54 pm)
பார்வை : 78

மேலே