கலங்காதே
எனக்கு நட்பின் அருமை இன்று தெரிந்தது ,
கண்களும் கண்ணீரும்
நீண்ட நாட்களுக்கு பின் சந்தித்து
இடைவிடாமல் பேசிக்கொண்டன
இறுதியில்,
உன்னை அடிக்கடி சந்திப்பேன்
என்று
கண்களிடம் கூறி கண்ணீர்
கன்னத்தின் வழியே
அன்னத்தை நுழையவிடாமல் சென்றது !!
செல்லமுன் என்னிடம் நெருங்கிவந்து
உன் உப்பு கன்னத்திற்கு
சொரணை இல்லாத மாந்தர்கள் காரணம்,
கலங்காதே !!!
என்று ஆறுதல் கூறி கண்ணீர் விடைப்பெற்றது....