நட்பு
கடலினில் கலந்தது உப்பு- ஆனால்
அது போன்று இல்லை நட்பு
உண்மையின் உன்னத உறவு -என்றும்
நிறைந்திடும் அதன் நினைவு
உயிர்வாழ வேண்டும் சுவாசம் -நம்
வாழ்வில் வேண்டுமே நேசம்
தீமையினைத் திரைப்போட்டுத் தடுக்கும் -நல்ல
நட்பினைக் கொள்வோம் நாமும்.............................