தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
சூழ்ச்சிகள் சூழலாம் அந்த
சூழ்கடல் மூழ்கலாம் - நாட்டின்
ஆட்சிகள் மாறலாம் புது
காட்சிகள் தோன்றலாம்...
தோன்றாது போகலாம் தமிழனின்
தோன்றலும் மறையலாம் - உடல்
புதையுண்டு அழியலாம் உறவுகள்
வதையுண்டு சாகலாம்
இந்தியாவிலும் ஈழத்திலும் தமிழ்
இன்னும் இன்னும் ஒழியலாம்
இருந்த இருப்பின்றி ஆகலாம்
இருட்டினிலே தொலையலாம்
நெருப்பாற்றை கடப்பதற்கு
நீச்சல் பழகு தமிழா,
கடலைக் குடிப்பதற்கு
தாகம் கொள்
இதோ...
வல்லாதிக்கங்களால்
நசுக்கப்பட்டுக் கிடக்கிறது
தமிழ் சமுதாயம்,
இன்னுமா தூங்குவது?
காதலை எழுதி எழுதி
களைத்துப்போய் கிடக்கிறதா
உங்கள் எண்ணமும் எழுதுகோலும்?
அட காதல் கவிஞனே
கொஞ்சம் நாட்டைப்பற்றியும் எழுந்துங்கடா
உங்களது வரவிற்காகத்தானே
காத்துக் கிடக்கிறது
இந்த தமிழ் சமுதாயம், இன்னுமா
காதலியின் கால்களையும் மார்பையும்
முகத்தையும் எழுதிக்கொண்டு இருப்பீர்கள்
பயந்தாங் கொள்ளிகளாக
வாழ்ந்தது போதும் வா தோழா,
உனக்கான களம்
காலியாக கிடக்கின்றது பார்,
அதை நிரப்பு
அழிந்துகொண்டு இருக்கின்ற
நமது இனத்தையும்
இன வரலாற்றையும் திரும்பிப் பார்
பணத்திற்கும் பதவிக்கும்
புகழுக்கும் ஆசைகொண்டு
தமிழ்த் தாயையே விபச்சாரி ஆக்கிவிட்டாயே;
அட மலந்தின்னியே
பிரிந்து பிரிந்து
பிய்ந்து கிடந்ததெல்லாம் போதும்
இனியாவது திருந்தி ஒன்றுபடு
ஒரு கிளையை வெட்டினால்
பல போத்துக்களை பிரசவிக்கும்
மரங்களைப்போல,
ஒன்றாக விழுந்தாலும்
பத்தாக உயிர்த்தெழுந்து - இந்த
பாரினில் நமது இருப்பை
அழுத்தமாக உறுதிசெய் வா.
----------------நிலாசூரியன். தச்சூர்.

