இயற்கை செயற்கை
இயற்கையில் சமைத்தது
இன்பங்களே!
இயல்பு மாறிடின்
துன்பங்களே!
இயற்கையின் தன்மைகள்
இதமான வாழ்க்கைக்கு!
செயற்கையில் சேர்ந்தவை
சோகங்கள் சுமப்பதற்கு!
இறைவன் படைக்கையில்
இருந்தவை இன்பங்களே!
இடையில் மனிதன் படைத்தவயே
மீளாத துன்பம் தருபவை!
செயற்கையின் உச்சத்தில்
செயல்பட்ட நிகழ்வுகளின்
சோகங்கள் சீக்கிரத்தில்
மறைவதில்லை!
சுனாமியும் ,பூகம்பமும் தரும்
சோகம் கூட மறைந்திடும்!
இயற்கையில் எல்லாம் அடங்கும்!
செயற்கை எல்லாம் முட(ங்)க்கிடும்!

