புதைத்தேப் போவாயோ

வானம் பார்த்த
விவசாயியின் காலடியில்
விதைமுத்தாய்
நீர்த்தூரல்!
விழுந்தது
நெல்முத்துமல்ல - மழை
நீர் முத்துமல்ல
அவன் கண்ணீர் முத்து!
மண்ணை முத்தமிட வேண்டிய மழை
கண்ணை முத்தமிட்டதால் சத்தமின்றி
ஒரு இடி ஏழையின் இதயத்தில்!
விதைத்தே காத்திருக்கிறேன் - என்னைப்
புதைத்தேப் போவாயோ இயற்கையே!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (15-Apr-15, 6:30 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 81

மேலே