நீங்கா நேசம்

தீராக் காதல்!
நீங்கா நேசம்!
போகாப் பாசம்!
தேடித் தேடி
விதைத்தேன்!
செடியும்,மரமும் வளர்த்தேன்!
இடம் பெயர்ந்தேன்
தீராக் காதல்
தீவிரக் காதல்!
மாமியார் இல்லமும்
தொடர்ந்தே வந்தது
இங்கும் விதைத்தேன்
செடியும் , மரமும்
வளர்த்தேன்!
இருப்பிடம் மாறினேன்
இன்னமும் தீரவில்லை
இங்கும் தொடர்ந்தேன்
கள்வர் உனைக்
கைப்பற்ற
கலங்கியே போனேன்
போகாப் பாசம்
ஓவியமாய் தீட்டினேன்
காற்றிலே கலந்திட!
நீங்கா நேசமல்லவா
கைவினைப் பொருளாய்
இல்லத்தில் இடம் பெற்றாய்
இன்னமும் தீராக் காதல்
இப்போதெல்லாம்
கவிதையாய் வடிக்கிறேன்!
பசுமைப் போற்ற
மரம் வளர்க்க
காடு காக்க
இப்படி எழுதிய
கவிதைகளும் முடியவில்லை!
மாறாத அன்பு
இயற்கையிடம்
நான் கொண்ட அன்பு
இறுதிவரை என்னுடனே!
என் துன்பங்களில்
தோள் கொடுத்த
தோழி கூடநீ தான்!
உன்னைப் பாரத்தாலே
மகிழ்ச்சி வரும்
நன்றிகள் பல
நடுகிறேன் தொட்டியில் ஒரு செடியை!