சுடுகாடாய்

சுற்றம் இழந்தது நானே
சுகங்கள் இழக்கப் போவது நீங்களே!
சொந்தம் இழந்தது நானே
சோகங்கள் சுமக்கப் போவது நீங்களே!
உறவினர் இழந்தது நானே
உடைமைகள் இழக்கப் போவது நீங்களே!
பந்தங்கள் இழந்தது நானே
பட்டினிக்கு சொந்தக்காரர்கள் நீங்களே!
இழப்புகள் எனக்கே
இறப்புகள் உங்களுக்கும்!
காடுகள் காணாமல் போனால்
சுடுகாடாய் உங்கள் தேசம்!