குரங்கு நாடு
கோடியாண்டு போனபின்னும்
குரங்குபுத்தி போகலையே
கோமாளி குருக்குபுத்தி
கொஞ்சங்கூட குறையலையே
பலதுறையில ஏற்றங்கள்
படிப்படியா வந்தாச்சு
பகுத்தறிவு மட்டுமிங்கே
பாதிகூட வளரலையே
சகமனுசன சாடுது
சாதியோட பாக்குது
சண்டபல வலுக்குது
சாட்டையுடன் தொரத்துது
முதலாளின்னு சொல்லுது
மொத்தத்தையும் சுருட்டுது
தொழிலாளர் கேட்டாக்கா
துரத்திபோய் வெட்டுது
கோட்டுசூட்டு போடுது
கோயிலுக்கு போவுது
கொட்டிபணம் கொடுக்குது
கோய்ந்தான்னு சொல்லுது
கோடிரூபா காருதான்
குளிர்சாதன வசதிதான்
கூடருக்கும் டிரைவருகோ
குடுக்கும்ரூவா நூறுதான்
கொள்கைகல பேசுது
கொள்ளைபல அடிக்கிது
கொதிச்சிபோய் கேட்டாக்கா
கொலைபன்னிதான் போடுது
மக்கள்நல திட்டமுன்னு
மடமடன்னு சொல்லுது
மக்களோட வரிப்பணத்த
மொத்தமாக திருடுது
வட்டசதுர மாவட்டன்னு
வகவகையா மொளைக்கிது
வலுத்தவர்யார் இளைத்தவர்யார்
வளைச்சுப்போட்டு மிதிக்கிது
எழுதபடிக்க தெரியாத்தெல்லாம்
ஏசிகாரில் போகுது
காறித்துப்ப கூடாதுன்னு
கட்சிகொடி பறக்குது
கவுன்சிலரு பதவிக்கெல்லாம்
காக்கிசட்டை பதுங்குது
காலநேரம் வாய்சுபுட்டா
கைவிலங்கை மாட்டுது
நீதிகெட்ட ஈநாட்டில்
நீசருக்கோ பஞ்சமில்லை
நேர்மைகிலோ என்னவிலை
நெனைச்சிபார்க்க முடியவில்லை
விவசாய நாடுன்னு
வெரும்வாயால் மெல்லுது
வேலிதாண்டி வயலுக்குள்ளே
வாயுகுழாய் செல்லுது
சர்க்காருன்னு சொல்லுது
சட்டத்தையே வளைக்குது
விவசாய நெலத்தையெல்லாம்
வெளிநாட்டுக்கு விக்கிது
எழைப்பாழை சனத்தையெல்லாம்
எலக்காரமா பாக்குது
எல்லாரையும் கொன்னுபுட்டு
என்னசெய்ய போவுது
கவனத்ததான் திருப்புது
கலகங்கள் பண்ணுது
கால்நொடிக்குள் எல்லாத்தையும்
கணக்குப்பாத்து முடிக்குது
ஆடுநனை யுதேன்னு
ஓநாயெல்லாம் அழுவுது
களவாணிகள் ஒன்னாசேந்து
கரிசனந்தான் காட்டுது
குரங்கெல்லாம் மாறுது
கூடிவோன்றாய் வாழுது
குட்டிகளோடு குடும்பமென
கூட்டதோடே திரியுது
கூட்டிகழிச்சி பாத்தாக்கூட
கொஞ்சங்கூட மாறலியே
குரங்கிளிரிந்து வந்தநாம
குரங்குபேரை கெடுக்கலாமோ??!!
பார்த்திபன். ப
12/04/2015